1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (13:14 IST)

வெட்கமா இல்ல... மார்க் மானத்தை பறக்கவிடும் நெட்டிசன்கள்!!

கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற பெயரிலான பேஸ்புக் பக்கத்தை, பேஸ்புக் நீக்கியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. 
 
மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பல நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப் அரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்து போராட்டம் செய்து வருவதால் தலைநகர் டெல்லி பெரும் பரபரப்பில் உள்ளது. 
 
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகளுடன் பல கட்ட பேச்சு வார்த்தைகளை மத்திய அரசு நடத்தியும் சுமுகமான முடிவு எட்டப்படாததால் போராட்டம் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடங்கிய கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற பெயரிலான பேஸ்புக் பக்கத்தை, பேஸ்புக் நிறுவனம் திடீரென முடக்கியது. இதேபோல் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கப்பட்டது.
 
இதனையடுத்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு கிசான் ஏக்தா மோர்ச்சாவின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. இருப்பினும் #ZuckerbergShameOnYou என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.