வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 3 மார்ச் 2020 (12:19 IST)

ட்விட்டரை விட்டு போகாதீங்க மோடி ஜீ! – நெட்டிசன்கள் ட்ரெண்டிங்!

பிரதமர் மோடி தனது சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமராவதற்கு முன்பே ட்விட்டரில் தனது பெயரில் ஒரு கணக்கு வைத்திருந்தார். பிரதமர் ஆன பிறகு தனது செயல்பாடுகளை தொடர்ந்து அதன் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி வந்தார். இதனால் பிரதமர் நரேந்திர மோடியை பலர் ஃபாலோ செய்து வந்தனர்.

சுமார் 53 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிலேயே அதிக ஃபாலோவர்கள் கொண்ட பிரபலம் என கூறப்படுகிறது. இந்நிலையில் ட்விட்டர் உட்பட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் வெளியேற யோசிப்பதாக அவர் தெரிவித்துள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது அறிவிப்பை தொடர்ந்து பலர் ‘ட்விட்டரை விட்டு போகாதீங்க மோடிஜீ’ என்றும், ‘மோடி வெளியேறிவிட்டால் நானும் வெளியேறிவிடுவேன்’ என்றும் பதிவிட்டு வருகின்றனர். பிரதமர் மோடி குறித்த ஹேஷ்டேகுகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.