வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (22:15 IST)

கேரள திரைப்பட விருதுகளில் தமிழகத்தைச் சேர்ந்த நேஹா தேர்வு! முதல்வர் பாராட்டு

Mk Stalin
கேரள மாநில அரசின் 52 வது திரைப்படவிருதுகளில் அந்தரம் படத்தில் நடித்த சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக திருநங்கையர்க்கான சிறப்பு பிரிவில்  தமிழகத்தைச் சேர்ந்த நேஹா தேர்வாகியுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கேரள மாநில அரசின் 52 வது திரைப்படவிருதுகளில் தமிழகத்தைச் சேர்ந்த  நேஹா அந்தரம் படத்தில் நடித்த சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக திருநங்கையர்க்கான சிறப்பு பிரிவில்  தேர்வாகியுள்ளது  மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழக முதல்வர் என்ற வகையிலும் நேஹா அவர்களின் வெற்றி எனக்குப் பெருமையளிக்கிறது.  குடும்பத்தின் புறக்கணிப்பால், இளம் வயதில், வீட்டைவிட்டு வெளியேறி  உழைப்பினாலும் தேடலினாலும் சாதித்துள்ள நேஹா  மேலும்,  பலருக்கு ஊக்கமாகவும் எடுத்துக்காட்டாகத் திகழ வாழ்த்துகிறேன்.

திரைப்படங்களில் திருநங்கையர் சினிமாவில் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்து,அத்துறையில் சமூக நீதி  நிலை நிறுத்த விழைகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.