திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (09:06 IST)

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியீடு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் விரைவில் வெளியாகும் என ஏற்கனவே தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது
 
அதன்படி சற்றுமுன்னர் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் டவுன்லோட் செய்து வருகின்றனர் 
 
neet.nta.nic.in என்ற இணையதளத்தில் இந்த ஹால் டிக்கெட்டை பதில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும் செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் nbe.edu.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதனையடுத்து மாணவர்கள் தங்களுடைய ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து வருகின்றனர்.