1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 3 பிப்ரவரி 2022 (18:58 IST)

50 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் காலாவதியாகிறதா? அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் 50 லட்சம் கோவிஷீல்ட்  தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தற்போது நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 50 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பிப்ரவரி அல்லது மார்ச் இறுதியில் காலாவதியாகும் நிலையில் உள்ளது 
இந்த நிலையில் காலாவதியாகும் கோவிஷீல்ட் மருந்துகளை திரும்ப பெற வேண்டும் என இந்திய மருத்துவ கழகம் கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கான பேச்சுக்கே இடமில்லை என சீரம் நிறுவனத்தினர் கூறியுள்ளனர்
 
கோவிஷீல்ட்  தடுப்பூசிகளை தனியார் நிறுவனம் எவ்வாறு பாதுகாத்தார்கள் எந்த குளிர்நிலையில் வைத்திருந்தார்கள் என்பதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பதால் நாங்கள் திரும்ப எடுத்துக் கொள்வது என்பது இயலாத காரியம் என தெரிவித்துள்ளது
 
இதனால் 50 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வீணாகப் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது