விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 1991-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நளினி என்பதும் இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தன்னை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இந்த மனு மீதான விசாரணை இன்று வந்த நிலையில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.