1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (14:13 IST)

விடுதலை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு!

விடுதலை படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது நடந்து வருகிறது.

கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட விடுதலை இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர்.

ஆனால் அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்தது. சமீபத்தில் கடைசி கட்ட ஷூட்டிங் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதிகளில் நடந்தது. அதோடு மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வெற்றிமாறன் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. இந்த அதிகாரப்பூர்வமற்ற தகவலை இப்போது படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை படக்குழு, பகிர, தற்போது அது இணையத்தில் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.