தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் டெல்லியில் மர்ம மரணம்
டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவமனையில் திருப்பூரை சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர் அங்குள்ள விடுதி கழிவறையில் சடலமாக காணப்பட்டார்.
தமிழகத்தில் இருந்து வட மாநிலங்கலுக்கு மருத்துவப் படிப்பு படிக்க செல்லும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் மர்மமான முறையில் இறப்பது தொடர் கதையாகி வருகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சரவணன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடந்த மாதம் குஜராத் மருத்துவக் கல்லூரியில் சாதிய பாகுபாடு காரணமாக தமிழகத்தை சேர்ந்த மாரிராஜ் என்ற மாணவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்தது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத்பாபு என்பவர் டெல்லியிலுள்ள யூசிஎம்எஸ் (University College of Medical Sciences) என்ற மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ். படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த அவர் இன்று காலை கழிவறையில் சடலமாக காணப்பட்டார். அவர் இன்சுலினை தனக்கு தானே செலுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனிக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவனின் மர்ம மரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.