திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2018 (11:53 IST)

செல்போன் திருடனை மடக்கிப் பிடித்த சகோதரிகள்

கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருட முயன்ற கொள்ளையனை, சகோதரிகள் இருவர் மடக்கிப் பிடித்த சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியத் தலைநகரமான டெல்லியில், சகோதரிகள் திரிஷா, ஆருஷி ஆகிய இருவர் கடைத்தெருவில் துணிமணிகளை வாங்கிக் கொண்டிருந்தனர். கடைத் தெருவில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையன் ஒருவன், திரிஷாவின் பையில் இருந்த செல்போனை திருடிக்கொண்டு தப்பித்துள்ளார். இதனைக்கண்ட திரிஷாவும், ஆருஷியும் திருடனை பிடிக்க முற்பட்டு திருடன், திருடன் என கூறிய படியே அவனை துரத்திச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் திருடனைப் பிடித்த் திரிஷா அவனின் கன்னத்தில் அறைந்து அவனிடம் இருந்த செல்போனை வாங்கினார்.
 
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருடனை கைது செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட திருடன் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. துணிச்சலாக திருடர்களை பிடித்த சகோதரிகளை பலர் பாராட்டி வருகின்றனர்.