நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்று சரிந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று சுமார் 300 புள்ளிகள் உயர்ந்து 58650 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 90 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 480 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளை நெருங்கி வருவது முதலீட்டாளர்கள் பெரும் நம்பிக்கை அளித்துள்ளது என்றும் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து விட்டால் பங்குச் சந்தை ஏற்றம் காணும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு கடந்த சில நாட்களாக நல்ல லாபம் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது