வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 பிப்ரவரி 2022 (09:05 IST)

என்ஜின் கவர் இல்லாமல் பறந்த விமானம்! – அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!

மும்பையில் இருந்து புறப்பட்ட விமானத்தின் என்ஜின் கவர் ஓடுதளத்தில் கழன்று விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை விமான நிலையத்தில் இருந்து அல்லயன்ஸ் நிறுவன பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை குஜராத் மாநிலம் புஜ் பகுதிக்கு புறப்பட்டது. அதில் 70 பயணிகள் பயணித்தனர். விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து பறக்கத் தொடங்கியபோது அதன் என்ஜினின் ஒரு பக்க கவர் கழன்று ஓடுபாதையில் விழுந்துள்ளது.

அது தெரியாமலே விமானிகள் விமானத்தை இயக்கியுள்ளனர். ஓடுதளத்தில் கவர் கழன்று விழுந்து கிடப்பதை கண்ட விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனினும் விமானம் பத்திரமாக குஜராத் சென்றடைந்துள்ளது. பின்னர்தான் கவர் கழன்று விழுந்த விவகாரம் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.