1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (15:24 IST)

முக்தார் அப்பாஸ் நக்வி - இவர்தானா பாஜக குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர்?

பாஜக சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக முக்தார் அப்பாஸ் நக்வியை அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
இந்திய குடியரசு தலைவருக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசு தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக திரௌபதி முர்மூவும், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராகா யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.
 
இந்நிலையில் பாஜக சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக முக்தார் அப்பாஸ் நக்வியை அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுடன் முக்தார் அப்பாஸ் நக்வி சந்திப்பு மேற்கொண்டுள்ளார். உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வி கடந்த மோடி அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா ஆகிய மூன்று முஸ்லிம் பெயர்கள் மீது அரசியல் வட்டாரங்கள் ஊகமாக உள்ளன. ஆளும் கூட்டணியில் இருந்து நான்காவது வேட்பாளராக கேப்டன் அம்ரீந்தர் சிங் உள்ளார்.