அரசு பங்களாவில் இருந்து உடனே வெளியேற வேண்டும்: டிஸ்மிஸ் செய்யப்பட்ட மஹுவாவுக்கு உத்தரவு..!
பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் கேட்டதாக குற்றம் தாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம் பி ஹுவா மொய்த்ரா அரசு பங்களாவிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹுவா மொய்த்ரா அரசு பங்களாவில் தொடர்ந்து இருந்து வருகிறார். இதனை அடுத்து அதிகாரிகள் அடங்கிய குழு அவர் வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
பங்களாவை காலி செய்ய சொல்லி எஸ்டேட்ஸ் இயக்குனராகம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பிருந்தது. அதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மறுத்துவிட்டதை அடுத்து தற்போது அவர் உடனடியாக அரசு பங்களாவில் இருந்து வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம் பி மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran