1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2020 (11:50 IST)

லிபர்டி சிலையை விட அதிக பார்வையாளர்கள்: பட்டேல் சிலை குறித்த தகவல்!

அமெரிக்காவில் உள்ள லிபர்டி சிலையை விட குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையை அதிக சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர் என குஜராத் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
கொரனோ நோய் பரவலுக்கு முன்னதாக அமெரிக்காவில் உள்ள லிபர்டி சிலையை விட அதிகமான சுற்றுலா பயணிகள் குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை சிலையை பார்வையிட்டனர் என குஜராத் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
இதனை அடுத்து குஜராத் மாநிலம் சர்வதேச சுற்றுலா தலமாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உலகின் மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார் என்பதும் இந்த சிலையை பார்ப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தற்போது அமெரிக்காவின் லிபர்ட்டி சிலையை விட அதிக பார்வை சுற்றுலா பயணிகள் பட்டியல் சிலையை பார்த்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது