வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2020 (11:48 IST)

நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் தேர்தல் ரத்தா? புதிய வழக்கு!

ஒரு தொகுதியில் வேட்பாளர்களை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் அந்த தொகுதியின் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
சமீபத்தில் பீகார் மாநிலத்தில் நடந்த தேர்தலில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் மாநிலம் முழுவதும் நோட்டாவுக்கு வாக்களித்திருந்தனர். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார் 
 
அந்த மனுவில் ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறும் போது அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் அந்த தொகுதியின் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும், அது மட்டுமின்றி அடுத்த ஆறு மாதத்துக்குள் அந்த தொகுதியை தேர்தல் நடத்தும் போது ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்கள் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
இந்த விதிகள் அமல் படுத்த பட்டால் மட்டுமே நாட்டில் நேர்மையான தேர்தல் நடைபெறும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு குறித்த விசாரணை விரைவில் சுப்ரீம் கோர்ட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது