வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 செப்டம்பர் 2018 (13:20 IST)

மாலத்தீவுகள் அதிபருக்கு மோடி வாழ்த்து- பதவியேற்பில் பங்கேற்பு?

நடந்து முடிந்த மாலத்திவுகள் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இப்ராஹிம் முகமது சோலிஹுக்கு இந்திய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலத்தீவுகளின் அதிபராக தற்போது அப்துல்லா யமீன் பதவி வகித்து வருகிறார். அவரின் பதவிக் காலம் வரும் நவம்பரோடு முடிவதையடுத்து செப்டம்பர் 23-ந்தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அதிபர் யமீன், எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முகமது சோலிஹிடம் தோற்றுள்ளார்.மொத்தம் பதிவான வாக்குகளில் சோலிஹ் 53 சதவீத வாக்குகளை பெற்று மாலத்தீவின் ஏழாவது அதிபராக பதவியேற்க உள்ளார்.



இந்நிலையில் அவருக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழத்து தெரிவித்துள்ளார். அவருக்கு முதலில் வாழத்து தெரிவித்த வெளிநாட்டு தலைவர் மோடியே ஆவர். நவம்பர் 17 ஆம் தேதி நடைபெற இருக்கும் சோலிஹின் பதவியேற்பு விழாவில் மோடி கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது. பதவியேற்பில் கலந்து கொள்ளும் தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அதில் மோடியின் பெயர் கண்டிப்பாக இருக்கும் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.



மோடி பதவியேற்றப் பின் இன்னும் மாலத்தீவுகளுக்கு செல்லவில்லை என்பதால் ஒருவேளை பதவியேற்பில் கலந்து கொண்டால் அதுவே அவரது முதல் மாலத்தீவு பயணமாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.