15 நிமிடம் கூட லீவ் எடுக்கல... புலம்பும் மோடி!
இந்திய பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இன்று நாடு திரும்புகிறார்.
இந்நிலையில், இந்த பயணத்தின் போது அவர் மேலேசியாவில் பின்வருமாறு பேசியுள்ளார். ராணுவ வீரர்கள் கடுமையான வானிலையை எதிர்கொண்டு நாட்டைக் காப்பாற்றுகிறார்கள். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காக பாடுபடுகிறார்கள்.
நானும், 18 ஆண்டுகளாக அதாவது 2001 ஆண்டில் இருந்து 15 நிமிடம் கூட விடுமுறை இல்லாமல் நாட்டிற்காக பணியாற்றி வருகிறேன். அமைதியாக உறங்குவதற்கு எனக்கு அனுமதி இல்லை என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.