வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 2 ஜூன் 2018 (10:36 IST)

எல்லாரும் டூர் போய்டாங்கப்பா அதுனாலதான் தோத்துத்டோம் - பாஜக அமைச்சரின் அறிவார்ந்த விளக்கம்

உத்தரப்பிரதேசம் கைரணா தொகுதியில் நடைபெற்ற தேர்தலின் போது, தொண்டர்கள் அனைவரும் டூர் சென்றுவிட்டதால் தான் பாஜக தோல்வி அடைந்தது என பாஜக அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் கைரணா மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் மிரிகங்கா சிங் தோல்வி அடைந்தார். காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பிஎஸ்பி, ஆதரவு பெற்ற ராஷ்டிரிய லோக் தள் வேட்பாளர் தபசம் ஹசன் வெற்றி பெற்றுள்ளார். இந்துப் பெரும்பான்மை தொகுதியான கைரணாவில் ஒரு இஸ்லாமியர் வெற்றி அடைந்திருப்பது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் நூர்புர் சட்டசபை தொகுதியும் பாஜக தோல்வியடைந்தது.
 
எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டதே பாஜகவின் தோல்விக்கு காரணம் என அனைவரும் கூறிக்கொண்டிருக்க, உத்திரபிரதேச பாஜக அமைச்சர் லக்‌ஷ்மி நாராயன் சவுத்திரி கோடை விடுமுறை என்பதால் தொண்டர்கள் அனைவரும் குழந்தைகளுடன் வெளியூருக்கு டூர் சென்றுவிட்டதால் தான் இடைத்தேர்தலில் தோற்றோம் என கூறியுள்ளார். அமைச்சரின் இந்த விளக்கத்தை பலரும் கேலி செய்து வருகின்றனர்.