வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 16 பிப்ரவரி 2019 (08:13 IST)

புல்வாமா தாக்குதல்: மோடியின் அதிரடி உத்தரவு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் இறுதி சடங்கில் பா.ஜ.க.அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
 
காஷ்மீரில் பயங்கரவாதிகள் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்த துயர சம்பவம் தேசத்தையே உலுக்கியுள்ளது.  இதற்கு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என நாடெங்கிலும் இருந்து கண்டனக்குரல்கள் எழுந்து வருகிறது.
 
இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
 
இந்நிலையில் வீரர்களின் இறுதி அஞ்சலியில் பா.ஜ.க. அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.