ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (22:12 IST)

தீவிரவாதத்தை ஆதரிக்கும் இந்தியர்களை சுட்டுத்தள்ளுங்கள்: ஒலிம்பிக் பதக்கம் வாங்கிய வீரர் ஆவேசம்

காஷ்மீரில் நேற்று நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலால் நாட்டு மக்கள் அனைவரும் கொதிப்படைந்துள்ள நிலையில் ஒருசிலர் இந்த தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக யாராவது குரல் கொடுத்தால் அவர்கள் இந்தியர்களாக இருந்தாலும் சுட்டுவிடுங்கள் என மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத் காட்டமாக தெரிவித்துள்ளார். இவர் கடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து யோகேஸ்வர் தத் மேலும் கூறியதாவது: புல்வாமாவில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் பெரும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதலை தடுக்கமுடியவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் பதிலடி கொடுப்பதற்கான நேரம் இது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. நாம் கொடுக்கும் பதிலடி தாக்குதல் தீவிரவாதிகள் பிறப்பதற்கே ஆயிரம் முறை யோசிக்கும் அளவிற்கு இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்தியர்கள் யாராவது தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருந்தாலோ அல்லது பேசினாலோ அவரை சுட்டுவிடுங்கள்' என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத் அவர்களின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒட்டுமொத்த இந்திய மக்களும் இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்ற மனப்பான்மையில் இருப்பதால் மத்திய அரசு இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்