1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (20:56 IST)

காஷ்மீர் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது - சூப்பர் ஸ்டார் ரஜினி

காஷ்மீர் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது -  சூப்பர் ஸ்டார் ரஜினி
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 45 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன்,சுப்பிரமணி ஆகிய இருவரும் வீர மரணமடைந்துள்ளார். இது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர வன்முறை தாக்குதலுக்கு 45 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
 
இந்த தாக்குதல் பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது:.
 
இந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கது. காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.அவர்களின் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.