புதன், 12 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (22:04 IST)

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி! பாஜகவுக்கு சாதகமா?

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி! பாஜகவுக்கு சாதகமா?
இந்திய பாதுகாப்பு படையினர்களின் விலை மதிப்பில்லாத 44 உயிர்கள் பலியாகியிருக்கும் இந்த நேரத்தில் இந்த தாக்குதலுக்கு அரசியல் சாயம் பூசும் வேலைகளை ஒருசில அரசியல் விமர்சகர்கள் செய்து வருகின்றனர்.

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை அதிரடியாக எடுப்பதன் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தமாதிரியும் இருக்கும், தேர்தல் நேரத்தில் மக்களின் நன்மதிப்பை பெற்ற மாதிரியும் இருக்கும் என பாஜக கருதுவதாக ஒருசில விமர்சர்கள் தொலைக்காட்சி விவாதத்தில் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ஈடு இணையற்ற வீரர்களின் வீரமரணத்திற்கு அரசியல் சாயம் பூசி கொச்சைப்படுத்த வேண்டாம் என அரசியல் விமர்சகர்களுக்கு நெட்டிசன்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றும் இந்த தாக்குதல் குறித்த சந்தேகத்தை கிளப்புவது மலிவான அரசியல் என்றும் ஒருசிலர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்