பிரதமர் நரேந்திர மோடிக்கு கொஞ்சம் கூட அதிர்ஷ்டமே இல்லை: ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு..!
பிரதமர் மோடி அதிர்ஷ்டம் இல்லாதவர் என்றும் பிரதமர் மோடி மேட்ச் பார்க்க சென்றதால் தான் உலக கோப்பையில் இந்தியா தோல்வியடைந்தது என்று மறைமுகமாக ராகுல் காந்தி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி சில நேரங்களில் கிரிக்கெட் போட்டியை காண செல்கிறார் என்றும் ஆனால் அந்த போட்டியில் கிடைத்தது தோல்விதான் என்றும் இதனால் பிரதமர் மோடி அதிர்ஷ்டம் இல்லாதவர் என்றும் ராகுல் காந்தி சமீபத்தில் பேசினார்.
மேலும் பிஎம் மோடி என்றாலே அதிர்ஷ்டம் இல்லா மோடி என்று தான் அர்த்தம் என்றும் அவர் பேசினார். அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பாரதிய ஜனதா கட்சி ராகுல் காந்தி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வியடையும் என்ற விரக்தியில் தான் ராகுல் காந்தி இவ்வாறு பேசுவதாகவும் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் பிரச்சனை தீவிரம் அடையும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பிரதமர் மோடி நேரில் பார்க்க வந்ததால் தான் இந்தியா தோல்வி அடைந்தது என்று காங்கிரஸ் மற்றும் சில கட்சிகள் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றன.
Edited by Mahendran