திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2023 (17:43 IST)

ராகுல் காந்தி நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார்: கார்கே பேச்சால் காங்கிரஸ் அதிர்ச்சி..!

Mallikarjun Kharge
ராஜீவ் காந்தி நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தார் என்று பேசுவதற்கு பதிலாக ராகுல் காந்தி நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தார் என மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே வெளியிட்டார்.

இதில் விவசாயிகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடன், மாணவர்களுக்கு மடிக்கணினி,  குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் உட்பட பல அறிவிப்புகள் வெளியாகின.

 தேர்தல் அறிக்கை வெளியிட்டவுடன் பேசிய மல்லிகார்ஜுன கார்கே பேசியபோது, ‘ ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தனர் என்று பேசினார். இதையடுத்து தனது தவறை திருத்திக் கொண்டு ராஜீவ் காந்தி என்று பேசினார். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva