புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (15:07 IST)

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு வரவேற்கிறேன்.. மோடி

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா வந்துள்ள நிலையில், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு வரவேற்கிறேன்” என மோடி வரவேற்றுள்ளார்.

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரை பிரதமர் மோடி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிட்டதை தொடர்ந்து, உலகின் மிக பிரம்மாண்டமான ஸ்டேடியமான அகமதாபாத்தின் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் டிரம்ப் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “பல மொழி பேசும் நாட்டிற்கு டிரம்ப் வருகை தந்துள்ளதை வரவேற்கிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு வரவேற்கிறேன். நமஸ்தே டிரம்ப் நிகழ்வை வெற்றி பெற செய்த குஜராத் மக்களுக்கு நன்றி” என கூறினார்.