வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 31 ஜூலை 2024 (09:03 IST)

நிலச்சரிவை பார்வையிட சென்ற போது விபத்து.. சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்க்கு என்ன ஆச்சு?

கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

வயநாடு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கிய மக்களை மீட்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் வயநாடு பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி என்ற பகுதியில் திடீரென விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறிய மருத்துவர்கள் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறியுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர்.

Edited by Siva