திங்கள், 9 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2024 (18:27 IST)

கனமழை மற்றும் நிலச்சரிவு.. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள் ரத்து..!

Train
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னிந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தண்டவாளங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி நிலச்சரிவால் தண்டவாளம் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழகத்திலிருந்து இது குறித்த செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

1. ரயில் எண்: 16791 பாலருவி விரைவு ரயில் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட இந்த ரயில், பாலக்காடு செல்ல வேண்டிய நிலையில், அலுவா ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. அலுவா – பாலக்காடு இடையே ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ரயில் எண்: 16792 பாலருவி விரைவு ரயில் பாலக்காடு சந்திப்பில் இருந்து திருநெல்வேலிக்கு இன்று புறப்பட வேண்டிய ரயில், அலுவா ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6.05 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. ரயில் எண்: 16649 பரசுராம் விரைவு ரயில் மங்களூரு சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி இன்று புறப்பட்ட விரைவு ரயில், சொரனூர் சந்திப்புடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சொரனூர் – கன்னியாகுமரி இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

4. ரயில் எண்: 16650 பரசுராம் விரைவு ரயில் கன்னியாகுமரியில் இருந்து ஜூலை 31 புறப்பட வேண்டிய பரசுராம் ரயில், சொரனூர் சந்திப்பில் இருந்து நாளை பிற்பகல் 2.05 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran