திங்கள், 9 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2024 (18:41 IST)

தொடர் ரயில் விபத்துக்கள்.. மத்திய அரசின் மெத்தனமே காரணம்: மம்தா பானர்ஜி

Mamtha
இந்தியாவில் தொடர்ச்சியாக ரயில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு மத்திய அரசின் மெத்தனமே காரணம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஹவுராவிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ஜார்கண்ட் மாநிலத்தில் விபத்துக்குள்ளானதில் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் கவிழ்வதாகவும் இதில் இரண்டு பேர் உயிர் இழந்ததாகவும் 20 பேருக்கு மேல் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
இந்த நிலையில் இந்தியாவில் தொடர்ச்சியாக ரயில் விபத்து நடந்து வருவது மத்திய அரசின் மெத்தன போக்கே காரணம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது
 
இன்று அதிகாலை இன்னொரு மோசமான  ரயில் விபத்து நிகழந்திருக்கிறது. ஜார்க்கண்டில் உள்ள சக்ரதர்பூர் பிரிவில் ஹவுரா-மும்பை மெயில் தடம் புரண்டதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
 
ஏராளமானோர் காயமடைந்திருக்கிறார்கள். இதுதான் ஆட்சியா? ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்து மரணங்களும், பலருக்கு காயங்களும் முடிவில்லாமல் தொடர்கிறது. இதை எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்ள வேண்டும்? மத்திய அரசின் அடாவடித்தனத்திற்கு, அரசின் மெத்தனப் போக்கிற்கு முடிவே கிடையாதா? உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்." என கூறியுள்ளார்.
 
Edited by Mahendran