வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 31 ஜூலை 2024 (08:57 IST)

வயநாட்டை குறிவைத்து தாக்கும் மழை! இன்றும் கனமழை, நிலச்சரிவு எச்சரிக்கை! பீதியில் மக்கள்!

Wayanad Landslide

கனமழை காரணமாக வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ள நிலையில் இன்றும் கனமழை, நிலச்சரிவுக்கான வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மலை மற்றும் மேப்பாடி பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதுவரை பலி எண்ணிக்கை 135ஐ தாண்டியுள்ளது.

 

சம்பவ இடத்தில் பேரிடர் மீட்பு படையினர், ராணுவம் ஆகியவை இறங்கி மீட்பு பணிகளில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வயநாடு பகுதியில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் வயநாடு, திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, வயநாட்டில் மேலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் ஏற்கனவே நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் பெரும் இடர்பாடுகள் எழும் என தெரிகிறது. இதனால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

 

Edit by Prasanth.K