1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 26 டிசம்பர் 2022 (10:40 IST)

மது அருந்துபவருக்கு பெண் கொடுக்க வேண்டாம்: மத்திய அமைச்சா் வேண்டுகோள்

alcoholic
மது அருந்துபவர்களுக்கு பெண் கொடுக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் கெளசல் கிஷோர் கேட்டுக்கொண்டுள்ளது அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மது அருந்தும் பழக்கம் காரணமாக தனது மகன் இறந்து விட்டதாக வேதனையுடன் தெரிவித்த மத்திய அமைச்சர் கெளசல் கிஷோர் மது அருந்துபவர்களுக்கு யாரும் பெண் கொடுக்க வேண்டாம் என்றும் அவ்வாறு பெண் கொடுத்தால் அந்த பெண்ணின் வாழ்க்கையும் சீரழிந்து விடும் என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
மது பழக்கத்தால் தனது அன்பான குடும்பம் வாழ முடியாமல் போய்விட்டது என்றும் நான் எம்பி ஆகவும் எனது மனைவியை எம்.எல்.ஏயாகவும் இருந்தும் எவ்வளவு வசதிகள் இருந்தும் மது பழக்கத்தை கொண்ட எனது மகனின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றும் எங்கள் நிலையே இப்படி என்றால் சாமானிய மக்களின் நிலை எப்படி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
எனவே மது அருந்துபவர்களுக்கு யாரும் பெண் கொடுக்க வேண்டாம் என்று அவர் குறிப்பிடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva