திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : புதன், 9 மார்ச் 2022 (16:30 IST)

பெட்ரோல், டீசல் விலை எங்கள் கைகளில் இல்லை: மத்திய பெட்ரோலிய அமைச்சர்

பெட்ரோல் டீசல் விலை எங்கள் கையில் இல்லை என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
உக்ரைன் ரஷ்யா போரினால் கச்சா எண்ணெய் விலை பயங்கரமாக உயர்ந்துள்ளதை அடுத்து இந்தியாவில் பெட்ரோல் விலை குறைந்த பட்சம் எட்டு ரூபாய் மற்றும் அதிகபட்சம் 20 ரூபாய் வரை உயரும் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது பெட்ரோல் டீசல் விலை தங்கள் கையில் இல்லை என்றும் பெட்ரோலிய நிறுவனங்களின் கையில் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார் 
 
பெட்ரோல் டீசல் விலை நாங்கள் கட்டுப்படுத்தவில்லை மத்திய அரசுதான் பெட்ரோல் விலை தீர்மானிக்கிறது என்று பேசுவது தவறு என்று கூறினார்