1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 7 மார்ச் 2022 (07:19 IST)

இன்றுடன் முடிகிறது 5 மாநில தேர்தல்: நாளை பெட்ரோல் விலை உயர்வா?

ஐந்து மாநில தேர்தல் இன்றுடன் முடிவடைவதை அடுத்து நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி 
 
5 மாநில தேர்தல் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் உத்தரபிரதேசத்தில் ஏழாவது இறுதிகட்ட தேர்தல் இன்று நடைபெற உள்ளது. 
 
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளதை அடுத்து நாளை பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு குறைந்தது 20 முதல் 25 ரூபாய் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது