தேர்தல் முடிந்த பின்னும் மாறாத பெட்ரோல் விலை: காரணம் என்ன?
5 மாநில தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் பெட்ரோல் டீசல் விலை உயராமல் அதே விலையில் உள்ளன.
கடந்த 120 நாட்களுக்கு மேலாகத் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையில் உள்ளது. உபி உள்ளிட்ட 5 மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதன் காரணமாகத்தான் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்று கூறப்பட்டது
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது