வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 4 பிப்ரவரி 2018 (14:31 IST)

மக்கள் வரிப் பணத்தில் 50,000 ரூபாய்க்கு மூக்குக் கண்ணாடி வாங்கிய அமைச்சர்

கேரளாவில் அமைச்சர் ஒருவர் மக்கள் வரிப் பணத்தில் 50,000 ரூபாய்க்கு மூக்குக் கண்ணாடி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா அரசு விதியின் படி, எம்.எல்.ஏக்கள் அரசு பணத்தில் மருத்துவ செலவு செய்து கொள்ளும் நடைமுறை பின்பற்றப் பட்டு வருகிறது. இதற்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து தனி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
 
இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக மக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் வி. பினு என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், யாருக்கு எவ்வளவு மருத்துவ செலவு செய்யப்பட்டு இருக்கிறது என்று கேட்டார். 
 
இதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் 50000 ரூபாய்க்கு மூக்குக்கண்ணாடி வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. மக்கள் கஷ்டப்பட்டு கட்டும் வரிப்பணத்தை வீண் செலவு செய்த அமைச்சருக்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.