வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (15:52 IST)

சசிகலா அணியுடன் எடப்பாடி இணக்கம்?: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

சசிகலா அணியுடன் இணக்கமாக செல்ல எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
 
பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
இது குறித்து கருத்து தெரிவித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரிடம், டிடிவி தினகரனைத் தவிர்த்து சசிகலா அணியில் உள்ள மற்றவர்களிடம் தமிழக அரசு இணக்கமாகச் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இது முழுக்க முழுக்கத் தவறான செய்தி. எந்தக் காலத்திலும் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் என கூறினார்.