Daily Horoscope

மைக்ரோசாஃப்ட் குளறுபடியால் இன்றும் விமானங்கள் ரத்து.. பயணிகள் அவதி

Written By Mahendran
Updated: சனி, 20 ஜூலை 2024 (08:19 IST)
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் சாஃப்ட்வேரில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக நாடு முழுவதும் பல்வேறு துறைகளின் பணிகள் முடங்கிய நிலையில் இன்று  2வது நாளாக விமான சேவை பாதிப்பு அடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இன்று தற்போது வரை 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 30க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணிநேரம் தாமதமானதால் பயணிகள் அவதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இணையதள சேவை ஒரே சீராக கிடைக்காமல், விட்டுவிட்டு வருவதால், இன்றும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் இன்று மதியத்திற்குள் முழுமையாக சீரடைந்து விடும் என்று நம்புகிறோம் என விமானநிலைய அதிகாரிகள் பேட்டி அளித்துள்ளனர்.

முன்னதாக நேற்று மைக்ரோசாப்ட் விண்டோஸ் குளறுபடி காரணமாக உலகம் முழுவதும் விமான சேவைகள், வங்கி சேவைகள், ஐடி அலுவலகங்கள் பணிகள் முடங்கியதாக தகவல் வெளியானது.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருளில் என்ன பிரச்சனை என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை என்றாலும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்ய மைக்ரோசாப்ட் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் இன்றுக்குள் நிலைமை முழுவதுமாக சரி செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Edited by Mahendran
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments