வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 15 பிப்ரவரி 2023 (08:02 IST)

பான் - ஆதார் இணைப்புக்கு கடைசி வாய்ப்பு.. மத்திய அரசு எச்சரிக்கை..

பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகிய இரண்டையும் இணைக்க வேண்டும் என்றும் இந்த இணைப்பு கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கனவே வலியுறுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பான் மற்றும் ஆதார எண்களை இணைத்து விட்டதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 கடைசி தேதி என்றும் அதன் பிறகு கால அவகாசம் நீடிக்கப்படாது என்றும் அதற்குள் ஆதார் எண் இணைக்காதவர்கள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கடைசி வாய்ப்பாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு ஆதார் எண்ணுடன் இணைக்காத பான் எண்கள் செயலிழக்கும் என்றும் அதனால் வங்கி கணக்குகள் உள்பட பல விஷயங்கள் முடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை அடுத்து இதுவரை பான் - ஆதார் எண்களை இணைக்காதவர்கள் உடனடியாக இணைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க ரூபாய் ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva