வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (11:22 IST)

இந்தியில் பேசிய மோடி: மண்டை குழம்பிய பியர் க்ரில்ஸ் – ட்ரெண்டான மீம்கள்

உலக புகழ்பெற்ற பியர் க்ரில்ஸின் டிவி தொடரில் கலந்து கொண்ட பிரதமர் இந்தியில் பேசியதை வைத்து மீம்கள் தயார் செய்து இணையத்தில் ட்ரெண்ட் செய்துள்ளனர் நெட்டிசன்கள்.

டிஸ்கவரி சேனலின் பிரபலமான தொடரான Man Vs Wild ல் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதாக ட்ரெய்லர் வெளியான நாளிலிருந்தே இந்த தொடர் பரவலாக பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பப்பட்ட Man Vs Wild நிகழ்ச்சியை காண பலரும் ஆர்வமாக இருந்தனர். பியர் க்ரில்ஸுடன் மோடி செய்யும் சாகசங்களை பலர் ரசித்தும் பார்த்தனர். ஆனால் பியர் க்ரில்ஸ் ரசிகர்கள் பலர் அவருடைய வழக்கமான சாகச பயணம் போல் இல்லாமல் இது சுமாராக இருந்தது என்று குறைப்பட்டு கொண்டனர். பலர் இந்த ஷோவை கிண்டல் செய்து ட்விட்டரில் மீம்களை வெளியிட்டனர்.

முக்கியமாக பியர் க்ரில்ஸ் மோடியுடன் ஆங்கிலத்தில் பேச, பிரதமர் மோடி அதற்கு சம்மந்தமே இல்லாமல் இந்தியில் பேசுகிறார். அவரது இந்தியை புரிந்து கொள்ள முடியாத பியர் க்ரில்ஸ் ஏதேதோ பேசுகிறார். இதைக்கண்டு கடுப்பான நெட்டிசன்ஸ் ட்விட்டரில் மீம்களை பறக்கவிட்டுள்ளனர். #ManvsModi என்ற ஹேஷ்டேகில் இந்த மீம்கள் ட்ரெண்டாகி வருகின்றன. அதேசமயம் அந்த ஹேஷ்டேகில் அவரை புகழ்ந்தும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.