முதல்வர் பதவிக்காக பதவி விலகுகிறாரா மத்திய அமைச்சர்?
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் உத்தரவிபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜகவும், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கின்றது.
ஆனால் கோவா மற்றும் மணிப்பூரில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் இழுபறி நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக இந்த இரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ள சிறிய கட்சி எம்.எல்.ஏக்களை இழுக்க காங்கிரஸ் மற்றும் பாஜக முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் கோவாவில் வெறும் 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள பாஜக சிறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி இன்னும் சில நிமிடங்களில் ஆதரவு எம்எல்ஏக்களின் கடித்ததுடன் கோவா மாநில ஆளுநரை சந்திக்கிறார் மனோகர் பாரிக்கர். இவர் ஏற்கனவே மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்து வரும் நிலையில் முதல்வர் பதவிக்காக விரைவில் அப்பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.,