செக்ஸ் அடிமை: காதல் கணவர் செய்ய முயன்ற கொடூரம்!
கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்த ஒருவர் அந்த பெண்ணை ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமையாக விற்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த பெண் ஒருவர் அவரது தந்தையின் பணி ஓய்வுக்கு பின்னர் கேரளா மாநிலத்துக்கு திரும்பினார். இவருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு முதலே ரியாஸ் என்ற நபருடன் காதல் இருந்து வந்தது. பெற்றோரின் சம்மதத்துடன் ரியாஸை அவர் திருமணம் செய்துகொண்டார்.
அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை வைத்து வற்புறுத்தி தான் ரியாஸ் அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை சவுதி அரேபியாவுக்கு அழைத்து சென்றுள்ளார் ரியாஸ்.
அங்கு ரியாஸ் தனது காதல் மனைவியை ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமையாக விற்க முயற்சி செய்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட அந்த பெண் தொலைப்பேசி மூலம் தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் ரியாஸை கைது செய்த போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ஆனால் ரியாஸ் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.