புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (15:24 IST)

”ஜேஎன்யூவில் நடந்தது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்”.. பாஜக மீது பாயும் மம்தா

டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு ஃபாசிஸ சர்ஜிக்கல் தாக்குதல் என விமர்சித்துள்ளார் மம்தா பானர்ஜி.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றபோது உள்ளே நுழைந்த மர்ம கும்பல் இரும்பு கம்பிகளால் மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த பல மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை ஃபாசிஸ சர்ஜிக்கல் தாக்குதல் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். மேலும் மத்திய அரசுக்கு எதிராக பேசினால், பாகிஸ்தானியர் என்றும் தேச துரோகி எனவும் முத்திரைக் குத்துகின்றனர் எனவும் கூறியுள்ளார்.