புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (08:48 IST)

இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சியா?? முதல்வரின் சர்ச்சை பேச்சு

இந்தியா ஜனாதிபதி ஆட்சி முறையை நோக்கித் தான் செல்கிறது என மேற்கு வங்க முதல்வர் பரபரப்பாக பேசியுள்ளார்.

இந்தியாவில் பிரதமர் தலைமையிலான ஆட்சி முறையே உள்ளது. ஆனால் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஜனாதிபதி ஆட்சி முறையே உள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் ஜனாதிபதி ஆட்சியே இனி வரும் என மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் நிறுவன நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, நாம் ஜனாதிபதி ஆட்சி முறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம், இனி ஒரே தேர்தல், ஒரே அரசியல் கட்சி என்ற நிலை வரும் என கூறியுள்ளார்.

மேலும் பாஜகவை குறித்து, மத்திய அரசின் இனவாத அரசியல் என்னும் போதைக்கு பலரும் இரையாகி வருகிறார்கள். ஆனால் நான் ஒருபோதும் அந்த போதைக்கு இரையாக மாட்டேன், அடிமையும் ஆகமாட்டேன் எனவும் ஆவேசமாக கூறியுள்ளார். மம்தா பானர்ஜியின் இந்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.