வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜனவரி 2018 (13:49 IST)

கடற்கரையில் பிணமாக கிடந்த இளம் நடிகர்: திரையுலகினர் அதிர்ச்சி!

மலையாள இளம் நடிகர் சித்து பிள்ளையின் உடல் கோவா கடற்கரையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மலையாள திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
மலையாள ஆக்‌ஷன் கிரைம் திரைப்படமான செகண்ட் ஷோ திரைப்படத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மானுடன் தனது முதல் படத்தில் நடித்தார் இளம் நடிகர் சித்து பிள்ளை. அதன் மூலம் பிரபலமான அவர் பின்னர் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.
 
திருச்சூரில் வசித்து வந்த 27 வயதான நடிகர் சித்து பிள்ளை கடந்த 12-ஆம் தேதி கோவாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் கடந்த திங்கள் கிழமை கோவா கடற்கரையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உடலை அவரது தாய் திங்கள் கிழமை மாலை அடையாளம் காட்டியுள்ளார்.
 
நடிகர் சித்து பிள்ளை பிரபல மலையாள தயாரிப்பாளர் பிகேஆர் பிள்ளையின் மகன் ஆவார். சித்து பிள்ளையின் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான திருச்சூரில் நடைபெற உள்ளது.

 
இளம் நடிகர் சித்து பிள்ளையின் மரணத்துக்கு பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் இரங்கலையும் தனது வருத்தத்தையும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.