வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 30 ஜனவரி 2019 (21:02 IST)

மகாத்மா காந்தியை துப்பாக்கியால் சுட்டு மாலை அணிவித்த பெண்...

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அலிகார் இந்து மகாசபா தேசிய செயலாளரான சக்குன் பாண்டே என்ற பெண் நம் தேசத்தந்தையான மகாத்மா காந்தியை துப்பாக்கியால் சுட்டு, கோட்சேவின் சிலைக்கு மாலை இடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
காந்தியடிகள் 78 வயதில் கடந்த 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி அன்று நாதுராம் கோட்சே என்பவனால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.
 
எனவே ஒவ்வொரு வருடமும் ஜனவரி 30 ஆம் தேதி காந்தியின் நினைவு தினத்தை எல்லோரும் அனுசரித்து வருகிறோம்.
 
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் இந்து தேசிய செயலாளர் சக்குன் பாண்டே என்பவர் காந்தியின் உருவப் படத்தை தன் கையில் உள்ள துப்பாக்கியால் சுட்டு அதன் பின்னர் அவரது படத்தின் மேல் சிவப்பு நிற திரவம் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் தன் ஆதரவாளர்கலுடன் காந்தியின் உருவபொம்மையை தீயிட்டுக் கொளுத்துகிறார் பாண்டே.
பின்னர் தன் ஆதரவாளர்களுடன் காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேவின் சிலைக்கு மாலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர் தன் ஆதரவாளர்களுக்கு இனிப்பு வழங்குகிறார்.
 
இந்து மகா சபாவினர் இவ்வாறு கொண்டாடத்தில் ஈடுபடுவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.