1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 30 ஜனவரி 2019 (20:24 IST)

மகளிடம் சில்மிஷம்; தட்டி கேட்ட தந்தைக்கு நேர்ந்த சோகம்

புதுக்கோட்டை அருகே மகளிடம் சில்மிஷம் செய்த நபரை தட்டி கேட்க சென்ற தந்தையை தாக்கியதில் அவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
புத்துக்கோட்டை மாநிலத்தில் உள்ள ரெத்தின்கோட்டையில் உள்ள நரியன் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் மகாலிங்கம். இவரின் மகளுக்கு செல்வம் என்பவர் சில்மிஷத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளார். 
 
சம்பவத்தன்று அதேபோல் நடக்க செல்வத்தை தட்டி கேட்க சென்றார் மகாலிங்கம். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் மகாலிங்கத்தை தாக்கியுள்ளார். தாக்கப்பட்டதும் மயக்கமடைந்தார் மகாலிங்கம்.
 
இதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே உயிரிழந்தார். மகாலிங்கத்தை தாக்கிய செல்வம் தலைமறைவாகியுள்ளார்.