மகாராஷ்டிராவில் பள்ளிகளை திறக்க உத்தரவு: அதிர்ச்சி தகவல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் அம்மாநிலத்தில் 24ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தரவு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஜனவரி 24ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
உலக சுகாதார மையம் ஏற்கனவே பள்ளிகளை மூட வேண்டாம் என அறிவுறுத்தியதை அடுத்து குழந்தைகளின் கல்வி கற்றல் பாதிக்கக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை உடன் பள்ளிகள் இயங்கும் என்றும் அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது
மகாராஷ்டிராவை அடுத்து மேலும் சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது