திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:45 IST)

வாங்கிய ஆறே நாட்களில் ரிப்பேர்: ஓலா பைக்கை கழுதையில் கட்டி ஊர்வலம் சென்ற நபர்

ola scooter donkey
வாங்கிய ஆறே நாட்களில் ரிப்பேர்: ஓலா பைக்கை கழுதையில் கட்டி ஊர்வலம் சென்ற நபர்
ஓலா பைக் வாங்கி 6 நாட்கள் மட்டுமே ஆனதை அடுத்து அந்த பைக்கை கழுதையில் கட்டி ஊர்வலம் எடுத்துச் சென்ற நபரால் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓலா பைக்கை வாங்கினார். அவர் வாங்கி 6 நாட்களில் அந்த பைக் ரிப்பேர் ஆகிவிட்டது இதனையடுத்து அவர் சர்வீஸ் சென்டருக்கு புகார் அளித்தார். ஆனால் அந்த நிறுவனத்திடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை 
 
இதனால் ஆத்திரமடைந்த அவர் தான் வாங்கிய பைக்கில் கழுதையில் கட்டி சாலையில் ஊர்வலமாக எடுத்துச் சென்றார். இதுகுறித்து புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானதை அடுத்து ஓலா நிறுவனம் உடனடியாக சர்வீஸ் எஞ்சினியரை அனுப்பி வைத்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது