வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (12:02 IST)

ஒரே நாளில் புலி, சிறுத்தை தாக்கி பெண், சிறுவன் பலி! – மகராஷ்டிராவில் அதிர்ச்சி!

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் புலி தாக்கியதில் பெண்ணும், சிறுத்தை தாக்கியதில் சிறுவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை சிறுவன் ராஜூ பத்கே மைதாம் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது அங்கு வந்த சிறுத்தை சிறுவனை தாக்கி இழுத்து சென்றுள்ளது. இதையறித்து சிறுவனை தேடத்தொடங்கிய வனத்துறையினர் மறுநாள் சிதைந்த நிலையில் சிறுவனின் உடலை கண்டுபிடித்துள்ளனர். இதனால் அந்த சிறுத்தையை பிடிக்க அப்பகுதியில் கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதேநாளில் கோசாம்பி என்ற பகுதியில் 55வயது பெண்ணை புலி ஒன்று தாக்கி கொன்றுள்ளது. ஒரே நாளில் வனவிலங்குகளால் இருவர் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.