புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (09:13 IST)

மகாராஷ்டிராவில் பறவை காய்ச்சல்! – 25 ஆயிரம் கோழிகளை கொல்ல உத்தரவு!

மகாராஷ்டிர மாநிலத்தில் பறவை காய்ச்சலால் வளர்ப்பு கோழிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் தானே பகுதியில் வளர்ப்பு கோழிகளுக்கு பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அங்குள்ள அனைத்து கோழி பண்ணைகளிலும் பறவை காய்ச்சல் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பறவை காய்ச்சல் காரணமாக கோழிக்கறி விலையும் கணிசமாக குறைந்துள்ளது.

இந்நிலையில் பறவை காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக பரவல் கண்டறியப்பட்ட தானே பகுதியில் உள்ள சுமார் 25 ஆயிரம் கோழிகளை கொல்ல அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பறவை காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.