1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (12:25 IST)

’மனுஷனா அவன்?’ காதலி மீது கொடூர தாக்குதல்! – வைரலான வீடியோவால் அதிர்ச்சி!

Video
மத்திய பிரதேசத்தில் காதலியை கண்மூடித்தனமாக தாக்கி சாலையில் மயக்க நிலையில் விட்டு சென்ற காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் இளைஞர் ஒருவரும், அவரது காதலியும் நடந்து சென்றுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏதோ விவாதம் எழுந்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அந்த இளைஞர் திடீரென தனது காதலியை அடிக்க தொடங்கினார். அவரை கீழே தள்ளி முகத்தில் ஆவேசமாக மிதித்துள்ளார். இதனால் அந்த பெண் மயக்கமடைந்த நிலையில் அந்த பெண்ணை அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளார்.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடம் விரைந்த போலீஸார் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததுடன், சம்பந்தப்பட்ட இளைஞரையும், அவரது நண்பரையும் கைது செய்துள்ளனர். பெண்ணை இளைஞர் அடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பலரும் மனிதத்தன்மையற்ற அந்த செயலை கண்டித்துள்ளனர்.

Edit By Prasanth.K